நூல்கள்›புறநானூறு›பாடல் 2170

பாடல் 2170

மடங்கலின் சினைஇ, மடங்கா உள்ளத்து,

அடங்காத் தானை வேந்தர் உடங்கு இயைந்து

என்னொடு பொருந்தும் என்ப; அவரை

ஆரமர் அலறத் தாக்கித் தேரொடு

அவர்ப்புறம் காணேன் ஆயின் - சிறந்த . . . .

பேரமர் உண்கண் இவளினும் பிரிக;

அறன்நிலை திரிய அன்பின் அவையத்துத்,

திறன்இல் ஒருவனை நாட்டி, முறை திரிந்து

மெலிகோல் செய்தேன் ஆகுக; மலி புகழ்

வையை சூழ்ந்த வலங்கெழு வைப்பின் . . . .

பொய்யா யாணர் மையற் கோமான்

மாவனும், மன்எயில் ஆந்தையும், உரைசால்

அந்துவஞ் சாத்தனும், ஆதன் அழிசியும்,

வெஞ்சின இயக்கனும், உளப்படப் பிறரும்,

கண்போல் நண்பிற் கேளிரொடு கலந்த . . . .

இன்களி மகிழ்நகை இழுக்கிய யான் ஒன்றோ,

மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த

தென்புலம் காவலின் ஒரிஇப், பிறர்

வன்புலங் காவலின் மாறி யான் பிறக்கே!

இவளையும் பிரிவேன்!

← பாடல் 2169பாடல் 2171 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்