நூல்கள்›புறநானூறு›பாடல் 2169

பாடல் 2169

தேஎம் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண!

கயத்து வாழ் யாமை காழ்கோத் தன்ன

நுண்கோல் தகைத்த தெண்கண் மாக்கிணை

இனிய காண்க; இவண் தணிக எனக் கூறி;

வினவல் ஆனா முதுவாய் இரவல! . . . .

தைத் திங்கள் தண்கயம் போலக்,

கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்,

அடுதீ அல்லது சுடுதீ அறியாது;

இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்,

கிள்ளி வளவன் நல்லிசை யுள்ளி, . . . .

நாற்ற நாட்டத்து அறுகாற் பறவை

சிறுவெள் ளாம்பல் ஞாங்கர்,ஊதும்

கைவள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப்

பாதிரி கமழும் ஓதி, ஒண்ணுதல்,

இன்னகை விறலியொடு மென்மெல இயலிச் . . . .

செல்வை ஆயின், செல்வை ஆகுவை;

விறகுஒய் மாக்கள் பொன்பெற் றன்னதோர்,

தலைப்பாடு அன்று, அவன் ஈகை;

நினைக்க வேண்டா; வாழ்க, அவன் தாளே!

குளிர்நீரும் குறையாத சோறும்

← பாடல் 2168பாடல் 2170 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்