நூல்கள்›புறநானூறு›பாடல் 2168

பாடல் 2168

கையது, கடன் நிறை யாழே; மெய்யது,

புரவலர் இன்மையின் பசியே; அரையது

வேற்றிழை நுழைந்த வேர்நனை சிதாஅர்

ஓம்பி உடுத்த உயவற் பாண!

பூட்கை இல்லோன் யாக்கை போலப் . . . .

பெரும்புல் என்ற இரும் பேர் ஒக்கலை;

வையகம் முழுவதுடன் வளைப், பையென

என்னை வினவுதி ஆயின், மன்னர்

அடுகளிறு உயவும் கொடிகொள் பாசறைக்,

குருதிப் பரப்பின் கோட்டுமா தொலைச்சிப் . . . .

புலாக் களம் செய்த கலாஅத் தானையன்

பிறங்கு நிலை மாடத்து உறந்தை யோனே!

பொருநர்க்கு ஓங்கிய வேலன், ஒரு நிலைப்

பகைப் புலம் படர்தலும் உரியன்; தகைத் தார்

ஒள்ளெரி புரையும் உருகெழு புசும்பூண் . . . .

கிள்ளி வளவற் படர்குவை ஆயின்,

நெடுங் கடை நிற்றலும் இலையே; கடும் பகல்

தேர்வீசு இருக்கை ஆர நோக்கி,

நீ அவற் கண்ட பின்றைப், பூவின்

ஆடுவண்டு இமிராத் தாமரை . . . .

சூடாய் ஆதல் அதனினும் இலையே.

காலமும் வேண்டாம்!

← பாடல் 2167பாடல் 2169 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்