நூல்கள்›புறநானூறு›பாடல் 2161

பாடல் 2161

வருதார் தாங்கி, அமர்மிகல் யாவது?

பொருது ஆண்டொழிந்த மைந்தர் புண்தொட்டுக்,

குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டி,

நிறம்கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர்

எடுத்துஎறி அனந்தற் பறைச்சீர் தூங்கப், . . . .

பருந்து அருந்துற்ற தானையொடு செருமுனிந்து,

அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்

தாம்மாய்ந் தனரே; குடைதுளங் கினவே;

உரைசால் சிறப்பின் முரசு ஒழிந்தனவே;

பன்னூறு அடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம் . . . .

இடம்கெட ஈண்டிய வியன்கண் பாசறைக்,

களங்கொளற்கு உரியோர் இன்றித், தெறுவர,

உடன்வீழ்ந் தன்றால், அமரே; பெண்டிரும்

பாசடகு மிசையார், பனிநீர் மூழ்கார்,

மார்பகம் பொருந்தி ஆங்கமைந் தன்றே; . . . .

வாடாப் பூவின், இமையா நாட்டத்து,

நாற்ற உணவினோரும் ஆற்ற

அரும்பெறல் உலகம் நிறைய

விருந்துபெற் றனரால்; பொலிக, நும் புகழே!

போரும் சீரும்!

← பாடல் 2160பாடல் 2162 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்