நூல்கள்›புறநானூறு›பாடல் 2162

பாடல் 2162

எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி,

விளைக்கும் வினையின்றிப் படைஒழிந் தனவே;

விறற் புகழ் மாண்ட புரவி எல்லாம்

மறத் தகை மைந்தரொடு ஆண்டுப்பட் டனவே;

தேர்தர வந்த சான்றோர் எல்லாம், . . . .

தோல் கண் மறைப்ப, ஒருங்கு மாய்ந்தனரே;

விசித்து வினை மாண்ட மயிர்க்கண் முரசம்,

பொறுக்குநர் இன்மையின், இருந்துவிளிந் தனவே;

சாந்தமை மார்பின் நெடுவேல் பாய்ந்தென,

வேந்தரும் பொருது, களத்து ஒழிந்தனர்; இனியே, . . . .

என்னா வதுகொல் தானே; கழனி

ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்

பாசவல் முக்கித், தண்புனல் பாயும்,

யாணர் அறாஅ வைப்பின்

காமர் கிடக்கை அவர் அகன்றலை நாடே? . . . .

என்னாவது கொல்?

← பாடல் 2161பாடல் 2163 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்