நூல்கள்›புறநானூறு›பாடல் 2156

பாடல் 2156

வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும்,

புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன,

உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற!

நின்னொன்று கூறுவது உடையோன்; என்னெனின்,

நீயே, பிறர்நாடு கொள்ளும்காலை, அவர் நாட்டு . . . .

இறங்கு கதிர் கழனிநின் இளையரும் கவர்க:

நனந்தலைப் பேரூர் எரியும் நைக்க;

மின்னு நிமிர்ந் தன்ன நின்ஒளிறு இலங்கு நெடுவேல்

ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம்

கடிமரம் தடிதல் ஓம்பு! நின் . . . .

நெடுதல் யானைக்குக் கந்தாற் றாவே

காவன்மரமும் கட்டுத்தறியும்!

← பாடல் 2155பாடல் 2157 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்