நூல்கள்›புறநானூறு›பாடல் 2154

பாடல் 2154

ஓங்கு மலைப் பெருவில் பாம்புஞாண் கொளீஇ,

ஒரு கணை கொண்டு மூவெயில் உடற்றிப்

பெரு விறல் அமரர்க்கு வெற்றி தந்த

கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப்

பிறை நுதல் விளங்கும் ஒருகண் போல, . . . .

வேந்து மேம்பட்ட பூந்தார் மாற!

கடுஞ் சினத்த கொல் களிறும்;

கதழ் பரிய கலி மாவும்,

நெடுங் கொடிய நிமிர் தேரும்,

நெஞ் சுடைய புகல் மறவரும், என . . . .

நான்குடன் மாண்ட தாயினும், மாண்ட

அறநெறி முதற்றே, அரசின் கொற்றம்;

அதனால், நமரெனக் கோல்கோ டாது,

பிறர் எனக் குணங் கொல்லாது,,

ஞாயிற் றன்ன வெந்திறல் ஆண்மையும், . . . .

திங்கள் அன்ன தண்பெருஞ் சாயலும்,

வானத்து அன்ன வண்மையும், மூன்றும்,

உடையை ஆகி, இல்லோர் கையற,

நீநீடு வாழிய நெடுந்தகை! தாழ்நீர்!

வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில் . . . .

நெடுவேள் நிலைஇய காமர் வியந்துறைக்

கடுவளி தொகுப்ப ஈண்டிய

வடுஆழ் எக்கர் மணலினும் பலவே!

மூன்று அறங்கள்!

← பாடல் 2153பாடல் 2155 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்