நூல்கள்›புறநானூறு›பாடல் 2153

பாடல் 2153

எங்கோன் இருந்த கம்பலை முதூர்,

உடையோர் போல இடையின்று குறுகிச்,

செம்மல் நாளவை அண்ணாந்து புகுதல்

எம்அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே;

இரவலர்க்கு எண்மை யல்லது; புரவு எதிர்ந்து . . . .

வானம் நாண, வரையாது, சென்றோர்க்கு

ஆனாது ஈயும் கவிகை வண்மைக்

கடுமான் கோதை துப்பெதிர்ந்து எழுந்த

நெடுமொழி மன்னர் நினைக்குங் காலைப்,

பாசிலைத் தொடுத்த உவலைக் கண்ணி, . . . .

மாசுண் உடுக்கை, மடிவாய், இடையன்

சிறுதலை ஆயமொடு குறுகல் செல்லாப்

புலிதுஞ்சு வியன்புலத்து அற்றே

வலிதுஞ்சு தடக்கை அவனுடை நாடே.

எளிதும் கடிதும்!

← பாடல் 2152பாடல் 2154 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்