நூல்கள்›புறநானூறு›பாடல் 2152

பாடல் 2152

முதிர்வார் இப்பி முத்த வார் மணல்,

கதிர்விடு மணியின் கண்பொரு மாடத்து,

இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும்

விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்ற

களங்கொள் யானைக், கடுமான், பொறைய! . . . .

விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்;

மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை

கைம்முற் றலநின் புகழே, என்றும்;

ஒளியோர் பிறந்தஇம் மலர்தலை உலகத்து

வாழேம் என்றலும் அரிதே; தாழாது . . . .

செறுத்த செய்யுள் செய்செந் நாவின்,

வெறுத்த கேள்வி, விளங்குபுகழ்க் கபிலன்

இன்றுளன் ஆயின், நன்றுமன், என்ற நின்

ஆடு கொள் வரிசைக்கு ஒப்பப்

பாடுவன் மன்னால், பகைவரைக் கடப்பே . . . .

செந்நாவும் சேரன் புகழும்!

← பாடல் 2151பாடல் 2153 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்