நூல்கள்›புறநானூறு›பாடல் 2151

பாடல் 2151

அணங்கு உடை நெடுங்கோட்டு அளையகம் முனைஇ,

முணங்கு நிமிர் வயமான் முழுவலி ஒருத்தல்,

ஊன்நசை உள்ளம் துரப்ப, இசை குறித்துத்

தான் வேண்டு மருங்கின் வேட்டுஎழுந் தாங்கு,

வடபுல மன்னர் வாட, அடல் குறித்து, . . . .

இன்னா வெம்போர் இயல்தேர் வழுதி!

இதுநீ கண்ணியது ஆயின், இரு நிலத்து

யார்கொல் அளியர் தாமே? ஊர்தொறும்

மீன்சுடு புகையின் புலவுநாறு நெடுங் கொடி

வயல்உழை மருதின் வாங்குசினை வலக்கும், . . . .

பெருநல் யாணரின் ஒரீஇ, இனியே

கலி கெழு கடவுள் கந்தம் கைவிடப்

பலிகண் மாறிய பாழ்படு பொதியில்,

நரைமூ தாளர் நாயிடக் குழிந்த

வல்லின் நல்லகம் நிறையப், பல்பொறிக் . . . .

கான வாரணம் ஈனும்

காடாகி விளியும் நாடுடை யோரே!

ஊன் விரும்பிய புலி!

← பாடல் 2150பாடல் 2152 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்