நூல்கள்›புறநானூறு›பாடல் 2150

பாடல் 2150

நீர்மிகின், சிறையும் இல்லை; தீமிகின்,

மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை;

வளிமிகின், வலியும் இல்லை; ஒளிமிக்கு

அவற்றோர் அன்ன சினப்போர் வழுதி,

தண் தமிழ் பொது எனப் பொறாஅன், போர் எதிர்ந்து, . . . .

கொண்டி வேண்டுவன் ஆயின், கொள்க எனக்

கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே;

அளியரோ அளியர், அவன் அளிஇழந் தோரே;

நுண்பல் சிதலை அரிதுமுயன்று எடுத்த

செம்புற்று ஈயல் போல, . . . .

ஒருபகல் வாழ்க்கைக்கு உலமரு வோரே!

ஈசலும் எதிர்ந்தோரும்!

← பாடல் 2149பாடல் 2151 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்