பாடல் 2147
கோதை மார்பிற் கோதை யானும்,
கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும்,
மாக்கழி மலர்ந்த நெய்த லானும்,
கள்நா றும்மே, கானல்அம் தொண்டி;
அதுஎம் ஊரே; அவன்எம் இறைவன்; . . . .
எம்மும் உள்ளுமோ; முதுவாய் இரவல!
அமர்மேம் படூஉங் காலை, நின்
புகழ்மேம் படுநனைக் கண்டனம் எனவே.
'கண்டனம்' என நினை!