பாடல் 2146
வள்ளியோர்ப் படர்ந்து, புள்ளின் போகி,
நெடிய என்னாது சுரம் பல கடந்து,
வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்,
பெற்றது மகிழ்ந்தும், சுற்றம் அருத்தி,
ஓம்பாது உண்டு, கூம்பாது வீசி, . . . .
வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை,
பிறர்க்குத் தீது அறிந்தன்றோ இன்றே, திறப்பட
நண்ணார் நாண, அண்ணாந்து ஏகி,
ஆங்கு இனிது ஒழுகின் அல்லது, ஓங்கு புகழ்
மண்ணாள் செல்வம் எய்திய . . . .
நும்மோர் அன்ன, செம்மலும் உடைத்தே.
புலவரைக் காத்த புலவர்!