நூல்கள்›புறநானூறு›பாடல் 2145

பாடல் 2145

நீயே புறவின் அல்லல் அன்றியும் பிறவும்

இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை,

இவரே புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சித்

தமது பகுத்து உண்ணும் தண்ணிழல் வாழ்நர்,

களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த . . . .

புன்தலைச் சிறாஅர் மன்று மருண்டு நோக்கி

விருந்திற் புன்கண் நோவுடையர்,

கேட்டனையாயின் நீ வேட்டது செய்ம்மே.

அருளும் பகையும்!

← பாடல் 2144பாடல் 2146 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்