நூல்கள்›புறநானூறு›பாடல் 2144

பாடல் 2144

இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்,

கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்,

நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே, நின்னொடு

பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே,

ஒருவீர் தோற்பினும் தோற்ப நும் குடியே, . . . .

இருவீர் வேறல் இயற்கையும் அன்றே, அதனால்

குடிப்பொருள் அன்று நும் செய்தி, கொடித்தேர்

நும்மோர் அன்ன வேந்தர்க்கு

மெய்ம்மலி உவகை செய்யும் இவ் விகலே.

தோற்பது நும் குடியே!

← பாடல் 2143பாடல் 2145 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்