நூல்கள்›புறநானூறு›பாடல் 2140

பாடல் 2140

காலனும் காலம் பார்க்கும்; பாராது

வேல்ஈண்டு தானை விழுமியோர் தொலைய,

வேண்டிடத்து அடூஉம் வெல்போர் வேந்தே!

திசைஇரு நான்கும் உற்கம் உற்கவும்,

பெருமரத்து, இலையில் நெடுங்கோடு வற்றல் பற்றவும், . . . .

வெங்கதிர்க் கனலி துற்றவும், பிறவும்,

அஞ்சுவரத் தகுந புள்ளுக்குரல் இயம்பவும்,

எயிறுநிலத்து வீழவும், எண்ணெய் ஆடவும்,

களிறுமேல் கொள்ளவும், காழகம் நீப்பவும்,

வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும், . . . .

கனவின் அரியன காணா, நனவின்

செருச்செய் முன்ப, நின் வருதிறன் நோக்கி,

மையல் கொண்ட ஏமம்இல் இருக்கையர்,

புதல்வர் பூங்கண் முத்தி, மனையோட்கு

எவ்வம் சுரக்கும் பைதல் மாக்களொடு . . . .

பெருங்கலக் குற்றன்றால் தானே; காற்றோடு

எரிநிகழ்ந் தன்ன செலவின்

செருமிகு வளவ! நிற் சினைஇயோர் நாடே.

காலனுக்கு மேலோன்!

← பாடல் 2139பாடல் 2141 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்