நூல்கள்›புறநானூறு›பாடல் 2139

பாடல் 2139

நீயே, பிறர் ஓம்புறு மறமன் னெயில்

ஓம்பாது கடந்தட்டு, அவர்

முடி புனைந்த பசும் பொன்னின்

அடி பொலியக் கழல் தைஇய

வல் லாளனை, வய வேந்தே! . . . .

யாமே, நின், இகழ் பாடுவோர் எருத்தடங்கப்,

புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற,

இன்றுகண் டாங்குக் காண்குவம், என்றும்

இன்சொல் எண்பதத்தை ஆகுமதி; பெரும!

ஒருபிடி படியுஞ் சீறிடம் . . . .

எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே!

ஒரு பிடியும் எழு களிரும்!

← பாடல் 2138பாடல் 2140 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்