நூல்கள்›புறநானூறு›பாடல் 2138

பாடல் 2138

புறவின் அல்லல் சொல்லிய, கறையடி

யானை வான்மருப் பெறிந்த வெண்கடைக்

கோல்நிறை துலாஅம் புக்கோன் மருக!

ஈதல்நின் புகழும் அன்றே; சார்தல்

ஒன்னார் உட்கும் துன்னரும் கடுந்திறல் . . . .

தூங்கெயில் எறிந்தநின் ஊங்கணோர் நினைப்பின்,

அடுதல்நின் புகழும் அன்றே; கெடுவின்று,

மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து,

அறம்நின்று நிலையிற் றாகலின், அதனால்

முறைமைநின் புகழும் அன்றே; மறம்மிக்கு, . . . .

எழுசமம் கடந்த எழுஉறழ் திணிதோள்,

கண்ணார் கண்ணிக், கலிமான், வளவ!

யாங்கனம் மொழிகோ யானே; ஓங்கிய

வரையளந் தறியாப் பொன்படு நெடுங்கோட்டு

இமையம் சூட்டியஏம விற்பொறி, . . . .

மாண்வினை நெடுந்தேர், வானவன் தொலைய

வாடா வஞ்சி வாட்டும்நின்

பீடுகெழு நோன்தாள் பாடுங் காலே?

புகழினும் சிறந்த சிறப்பு!

← பாடல் 2137பாடல் 2139 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்