நூல்கள்›புறநானூறு›பாடல் 2137

பாடல் 2137

வரை புரையும் மழகளிற்றின் மிசை,

வான் துடைக்கும் வகைய போல

விரவு உருவின கொடி நுடங்கும்

வியன் தானை விறல் வேந்தே!

நீ, உடன்று நோக்கும்வாய் எரிதவழ, . . . .

நீ, நயந்து நோக்கும்வாய் பொன்பூப்பச்,

செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும்,

வெண் திங்களுள் வெயில் வேண்டினும்,

வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின்,

நின்நிழல் பிறந்து, நின்நிழல் வளர்ந்த, . . . .

எம் அளவு எவனோ மற்றே? இன்நிலைப்

பொலம்பூங் காவின் நன்னாட் டோரும்

செய்வினை மருங்கின் எய்தல் அல்லதை,

உடையோர் ஈதலும், இல்லோர் இரத்தலும்

கடவ தன்மையின், கையறவு உடைத்துஎன, . . . .

ஆண்டுச் செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின்,

நின்நாடு உள்ளுவர், பரிசிலர்;

ஒன்னார் தேஎத்தும், நின்னுடைத் தெனவே.

வேண்டியது விளைக்கும் வேந்தன்!

← பாடல் 2136பாடல் 2138 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்