நூல்கள்›புறநானூறு›பாடல் 2141

பாடல் 2141

ஆனா ஈகை, அடு போர், அண்ணல்! நின்

யானையும் மலையின் தோன்றும்; பெரும! நின்

தானையும் கடலென முழங்கும்; கூர்நுனை

வேலும் மின்னின் விளங்கும் ; உலகத்து

அரைசுதலை பனிக்கும் ஆற்றலை யாதலின், . . . .

புரைதீர்ந் தன்று; அது புதுவதோ அன்றே;

தண்புனற் பூசல் அல்லது, நொந்து,

களைக, வாழி, வளவ! என்று, நின்

முனைதரு பூசல் கனவினும் அறியாது,

புலிபுறங் காக்கும் குருளை போல, . . . .

மெலிவில் செங்கோல் நீபுறங் காப்பப்,

பெருவிறல் யாணர்த் தாகி, அரிநர்

கீழ்மடைக் கொண்ட வாளையும், உழவர்

படைமிளிர்ந் திட்ட யாமையும், அறைநர்

கரும்பிற் கொண்ட தேனும், பெருந்துறை . . . .

நீர்தரு மகளிர் குற்ற குவளையும்,

வன்புலக் கேளிர்க்கு வருவிருந் தயரும்

மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந!

மலையின் இழிந்து, மாக்கடல் நோக்கி,

நிலவரை இழிதரும் பல்யாறு போலப், . . . .

புலவ ரெல்லாம் நின்நோக் கினரே;

நீயே, மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்துக்

கூற்றுவெகுண் டன்ன முன்பொடு,

மாற்றுஇரு வேந்தர் மண்நோக் கினையே.

ஈகையும் வாகையும்!

← பாடல் 2140பாடல் 2142 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்