நூல்கள்›புறநானூறு›பாடல் 2134

பாடல் 2134

நளிஇரு முந்நீர் ஏணி யாக,

வளிஇடை வழங்கா வானம் சூடிய

மண்திணி கிடக்கைத் தண்தமிழ்க் கிழவர்,

முரசு முழங்கு தானை மூவர் உள்ளும்,

அரசுஎனப் படுவது நினதே, பெரும! . . . .

அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும்,

இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்,

அந்தண் காவிரி வந்து கவர்பு ஊட்டத்,

தோடு கொள் வேலின் தோற்றம் போல,

ஆடுகண் கரும்பின் வெண்பூ நுடங்கும் . . . .

நாடுஎனப் படுவது நினதே அத்தை; ஆங்க

நாடுகெழு செல்வத்துப் பீடுகெழு வேந்தே!

நினவ கூறுவல்; எனவ கேண்மதி!

அறம்புரிந் தன்ன செங்கோல் நாட்டத்து

முறைவெண்டு பொழுதின் பதன் எளியோர் ஈண்டு . . . .

உறைவேண்டு பொழுதில் பெயல்பெற் றோறே;

ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்டுமூ

மாக விசும்பின் நடுவுநின் றாங்குக்,

கண்பொர விளங்கும்நின் விண்பொரு வியன்குடை

வெயில்மறைக் கொண்டன்றோ? அன்றே; வருந்திய . . . .

குடிமறைப் பதுவே; கூர்வேல் வளவ!

வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்பக்,

களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை,

வருபடை தாங்கிப், பெயர்புறத் தார்த்துப்,

பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை . . . .

ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே;

மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும்,

இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்,

காவலர்ப் பழிக்கும், இக் கண்ணகன் ஞாலம்;

அதுநற்கு அறிந்தனை யாயின், நீயும் . . . .

நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது,

பகடுபுறந் தருநர் பாரம் ஓம்பிக்,

குடிபுறம் தருகுவை யாயின், நின்

அடிபுறம் தருகுவர், அடங்கா தேரே.

உழுபடையும் பொருபடையும்!

← பாடல் 2133பாடல் 2135 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்