நூல்கள்›புறநானூறு›பாடல் 2128

பாடல் 2128

அழல் புரிந்த அடர் தாமரை

ஐது அடர்ந்ற நூற் பெய்து,

புனை விளைப் பொலிந்த பொலன் நறுந் தெரியல்

பாறு மயிர் இருந்தலை பொலியச் சூடிப்,

பாண் முற்றுக, நின் நாள்மகிழ் இருக்கை! . . . .

பாண் முற்று ஒழிந்த பின்றை, மகளிர்

தோள் முற்றுக, நின் சாந்துபுலர் அகலம்! ஆங்க

முனிவில் முற்றத்து, இனிது முரசு இயம்பக்,

கொடியோர்த் தெறுதலும், செவ்வியோர்க்குஅளித்தலும்,

ஒடியா முறையின் மடிவிலை யாகி . . . .

நல்லதன் நலனும் தீயதன் தீமையும்

இல்லை என்போர்க்கு இனன் ஆகி லியர்!

நெல்விளை கழனிப் படுபுள் ஓப்புநர்

ஒழி மடல் விறகின் கழுமீன் சுட்டு,

வெங்கள் தொலைச்சியும் அமையார், தெங்கின் . . . .

இளநீர் உதிர்க்கும் வளமிகு நன்னாடு

பெற்றனர் உவக்கும் நின் படைகொள் மாக்கள்

பற்றா மாக்களின் பரிவு முந்து உறுத்துக்,

கூவை துற்ற நாற்கால் பந்தர்ச்,

சிறுமனை வாழ்க்கையின் ஒரீஇ, வருநர்க்கு . . . .

உதவி ஆற்றும் நண்பின் பண்புடை

ஊழிற்று ஆக, நின் செய்கை! விழவின்

கோடியர் நீர்மை போல முறை முறை

ஆடுநர் கழியும்இவ் உலகத்துக், கூடிய

நகைப் புறனாக, நின் சுற்றம்! . . . .

இசைப்புற னாக, நீ ஓம்பிய பொருளே!

நண்பின் பண்பினன் ஆகுக!

← பாடல் 2127பாடல் 2129 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்