நூல்கள்›புறநானூறு›பாடல் 2129

பாடல் 2129

செஞ்ஞா யிற்றுச் செலவும்

அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்,

பரிப்புச் சூழ்ந்த மண் டிலமும்,

வளி திரிதரு திசையும்,

வறிது நிலைஇய காயமும், என்றிவை . . . .

சென்றளந்து அறிந்தார் போல, என்றும்

இனைத்து என்போரும் உளரே அனைத்தும்

அறிவுஅறி வாகச் செறிவினை யாகிக்,

களிறுகவுள் அடுத்த எறிகல் போல

ஒளித்த துப்பினை ஆதலின், வெளிப்பட . . . .

யாங்ஙனம் பாடுவர், புலவர்? கூம்பொடு

மீப்பாய் களையாது, மிசைப் பரந் தோண்டாது,

புகாஅர்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர்

இடைப்புலப் பெருவழிச் சொரியும்

கடல்பல் தாரத்த நாடுகிழ வோயே! . . . .

எங்ஙனம் பாடுவர்?

← பாடல் 2128பாடல் 2130 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்