நூல்கள்›புறநானூறு›பாடல் 2127

பாடல் 2127

எனும் உறுதிப் பொருள்கள் பற்றிய குறிப்பு.

சிறப்பில் சிதடும், உறுப்பில் பிண்டமும்,

கூனும், குறளும், ஊமும், செவிடும்

மாவும், மருளும், உளப்பட வாழ்நர்க்கு

எண்பேர் எச்சம் என்றிவை எல்லாம் . . . .

பேதைமை அல்லது ஊதியம் இல், என

முன்னும் அறிந்தோர் கூறினர்; இன்னும்,

அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது;

வட்ட வரிய செம்பொறிச் சேவல்

ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம் . . . .

கானத் தோர், நின் தெவ்வர்; நீயே

புறஞ்சிறை மாக்கட்கு அறங்குறித்து, அகத்தோர்

புய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரைப்

பூம்போது சிதைய வீழ்ந்தெனக், கூத்தர்

ஆடுகளம் கடுக்கும் அகநாட் டையே; . . . .

அதனால், அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்

ஆற்றும், பெரும! நின்செல்வம்;

ஆற்றாமை நின் போற்றா மையே.

போற்றாமையும் ஆற்றாமையும்!

← பாடல் 2126பாடல் 2128 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்