நூல்கள்›புறநானூறு›பாடல் 2122

பாடல் 2122

வெளிறில் நோன்காழ்ப் பணைநிலை முனைஇக்,

களிறுபடிந்து உண்டெனக், கலங்கிய துறையும்!

கார்நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல்,

சூர்நவை, முருகன் சுற்றத்து அன்ன, நின்

கூர்நல் அம்பின் கொடுவில் கூளியர் . . . .

கொள்வது கொண்டு, கொள்ளா மிச்சில்

கொள்பதம் ஒழிய வீசிய புலனும்;

வடிநவில் நவியம் பாய்தலின், ஊர்தொறும்

கடிமரம் துளங்கிய காவும்; நெடுநகர்

வினைபுனை நல்லில் வெவ்வெரி நைப்பக், . . . .

கனைஎரி உரறிய மருங்கும்; நோக்கி,

நண்ணார் நாண, நாள்தொறும் தலைச்சென்று,

இன்னும் இன்னபல செய்குவன், யாவரும்

துன்னல் போகிய துணிவினோன், என,

ஞாலம் நெளிய ஈண்டிய வியன்படை . . . .

ஆலங் கானத்து அமர்கடந்து அட்ட

கால முன்ப! நின் கண்டனென் வருவல்;

அறுமருப்பு எழிற்கலை புலிப்பால் பட்டெனச்,

சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை

பூளை நீடிய வெருவரு பறந்தலை . . . .

வேளை வெண்பூக் கறிக்கும்

ஆளில் அத்தம் ஆகிய காடே.

நண்ணார் நாணுவர்!

← பாடல் 2121பாடல் 2123 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்