நூல்கள்›புறநானூறு›பாடல் 2121

பாடல் 2121

தூங்கு கையான் ஓங்கு நடைய,

உறழ் மணியான் உயர் மருப்பின,

பிறை நுதலான் செறல் நோக்கின,

பா வடியால் பணை எருத்தின,

தேன் சிதைந்த வரை போல, . . . .

மிஞிறு ஆர்க்கும் கமழ்கடா அத்து,

அயறு சோரூம் இருஞ் சென்னிய,

மைந்து மலிந்த மழ களிறு

கந்து சேர்பு நிலைஇ வழங்கப்;

பாஅல் நின்று கதிர் சோரும் . . . .

வான உறையும் மதி போலும்

மாலை வெண் குடை நீழலான்,

வாள் மருங்கு இலோர் காப்பு உறங்க,

அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த

ஆய் கரும்பின் கொடிக் கூரை, . . . .

சாறு கொண்ட களம் போல,

வேறு வேறு பொலிவு தோன்றக்

குற் றானா உலக் கையால்;

கலிச் சும்மை வியல் ஆங்கண்

பொலம் தோட்டுப் பைந் தும்பை . . . .

மிசை அலங்கு உளைய பனைப்போழ் செரிஇச்,

சின மாந்தர் வெறிக் குரவை

ஓத நீரில் பெயர்பு பொங்க;

வாய் காவாது பரந்து பட்ட

வியன் பாசறைக் காப் பாள! . . . .

வேந்து தந்த பணி திறையாற்

சேர்ந் தவர் கடும்பு ஆர்த்தும்,

ஓங்கு கொல்லியோர், அடு பொருந!

வேழ நோக்கின் விறல்வெம் சேஎய்!

வாழிய, பெரும! நின் வரம்பில் படைப்பே! . . . .

நிற் பாடிய அலங்கு செந்நாப்

பிற்பிறர் இசை நுவ லாமை,

ஒம்பாது ஈயும் ஆற்றல் எங்கோ!

மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே

புத்தேள் உலகத்து அற்று எனக் கேட்டு, வந்து . . . .

இனிது காண்டிசின்; பெரும! முனிவிலை,

வேறுபுலத்து இறுக்கும் தானையோடு

சோறுயட நடத்தி; நீ துஞ்சாய் மாறே!

ஈகையும் நாவும்!

← பாடல் 2120பாடல் 2122 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்