நூல்கள்›புறநானூறு›பாடல் 2108

பாடல் 2108

ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,

பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,

எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின் என . . . .

அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்

கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்

எங்கோ, வாழிய குடுமி! தங் கோச்

செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,

முந்நீர் விழவின், நெடியோன் . . . .

நன்னீர்ப் பறுளி மணலினும் பலவே!

ஆற்றுமணலும் வாழ்நாளும்!

← பாடல் 2107பாடல் 2109 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்