பாடல் 2107
வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்
போகம் வேண்டிப், பொதுச் சொல் பொறாஅது,
இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப,
ஒடுங்கா உள்ளத்து, ஓம்பா ஈகைக்
கடந்து அடு தானைச் சேரலாதனை . . . .
யாங்கனம் ஒத்தியோ வீங்கு செலல் மண்டிலம்,
பொழுது என வரைதி, புறக்கொடுத்து இறத்தி,
மாறி வருதி, மலை மறைந்து ஒளித்தி,
அகல் இரு விசும்பினானும்
பகல் விளங்குதியால் பல் கதிர் விரித்தே? . . . .
கதிர்நிகர் ஆகாக் காவலன்!