நூல்கள்›புறநானூறு›பாடல் 2106

பாடல் 2106

களிறு கடைஇய தாள்,

கழல் உரீஇய திருந்துஅடிக்,

கணை பொருது கவிவண் கையால்,

கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து

மா மறுத்த மலர் மார்பின், . . . .

தோல் பெயரிய எறுழ் முன்பின்,

எல்லையும் இரவும் எண்ணாய், பகைவர்

ஊர்சுடு விளக்கத்து அழுவிளிக் கம்பலைக்

கொள்ளை மேவலை; ஆகலின், நல்ல

இல்ல ஆகுபவால் இயல்தேர் வளவ! . . . .

தண்புனல் பரந்த பூசல் மண் மறுத்து

மீனின் செறுக்கும் யாணர்ப்

பயன்திகழ் வைப்பின், பிறர் அகன்றலை நாடே.

வளநாடும் வற்றிவிடும்!

← பாடல் 2105பாடல் 2107 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்