நூல்கள்›புறநானூறு›பாடல் 2105

பாடல் 2105

வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்,

தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்,

குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்,

குடாஅது தொன்றுமுதிர் பொளவத்தின் குடக்கும்,

கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின் . . . .

நீர்நிலை நிவப்பின் கீழும், மேலது

ஆனிலை உலகத் தானும், ஆனாது,

உருவும் புகழும் ஆகி, விரிசீர்த்

தெரிகோல் ஞமன்ன் போல, ஒரு திறம்

பற்றல் இலியரோ! நின் திறம் சிறக்க! . . . .

செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்,

கடற்படை குளிப்ப மண்டி, அடர்ப் புகர்ச்

சிறுகண் யானை செவ்விதின் ஏவிப்,

பாசவற் படப்பை ஆர்எயில் பலதந்து,

அவ்வெயில் கொண்ட செய்வுறு நன்கலம் . . . .

பரிசின் மாக்கட்கு வரிசையின் நல்கிப்,

பணியியர் அத்தை நின் குடையே; முனிவர்

முக்கண் செல்வர் நகர்வலஞ் செயற்கே!

இறைஞ்சுக, பெரும! நின் சென்னி; சிறந்த

நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே! . . . .

வாடுக, இறைவ நின் கண்ணி! ஒன்னார்

நாடுசுடு கமழ்புகை எறித்த லானே!

செலிஇயர் அத்தை, நின் வெகுளி; வால்இழை

மங்கையர் துனித்த வாள்முகத்து எதிரே!

ஆங்க, வென்றி எல்லாம் வென்றுஅகத்துஅடக்கிய . . . .

தண்டா ஈகைத் தகைமாண் குடுமி!

தண்கதிர் மதியம் போலவும், தெறுசுடர்

ஒண்கதிர் ஞாயிறு போலவும்,

மன்னிய, பெரும! நீ நிலமிசை யானே!

தண்ணிலவும் வெங்கதிரும்!

← பாடல் 2104பாடல் 2106 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்