நூல்கள்›புறநானூறு›பாடல் 2104

பாடல் 2104

எருமை அன்ன கருங்கல் இடைதோறும்

ஆனின் பரக்கும் யானைய முன்பின்

கானக நாடனை நீயோ பெரும!

நீயோர் ஆகலின் நின் ஒன்று மொழிவல்,

அருளும் அன்பும் நீக்கி நீங்கா . . . .

நிரயம் கொள்பவரொடு ஒன்றாது காவல்

குழவி கொள்பவரின் ஓம்புமதி,

அளிதோ தானே அது பெறல் அருங்குரைத்தே.

அருளும் அருமையும்!

← பாடல் 2103பாடல் 2105 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்