நூல்கள்›புறநானூறு›பாடல் 2103

பாடல் 2103

வாள், வலந்தர, மறுப் பட்டன

செவ் வானத்து வனப்புப் போன்றன!

தாள், களங்கொளக், கழல் பறைந்தன

கொல் ஏற்றின் மருப்புப் போன்றன;

தோல்; துவைத்து அம்பின் துனைதோன்றுவ, . . . .

நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன;

மாவே, எறிபதத்தான் இடங் காட்டக்,

கறுழ் பொருத செவ் வாயான்,

எருத்து வவ்விய புலி போன்றன;

களிறே, கதவு எறியாச், சிவந்து, உராஅய், . . . .

நுதி மழுங்கிய வெண் கோட்டான்,

உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;

நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப்

பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி,

மாக் கடல் நிவந் தெழுதரும் . . . .

செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ!

அனையை ஆகன் மாறே,

தாயில் தூவாக் குழவி போல,

ஓவாது கூஉம், நின் உடற்றியோர் நாடே.

தாயற்ற குழந்தை!

← பாடல் 2102பாடல் 2104 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்