நூல்கள்›அகநானூறு›பாடல் 2097

பாடல் 2097

மதுரை மருதன் இளநாகனார்

தேர் சேண் நீக்கி, தமியன் வந்து, 'நும்

ஊர் யாது?' என்ன, நணி நணி ஒதுங்கி,

முன் நாள் போகிய துறைவன், நெருநை,

அகல் இலை நாவல் உண்துறை உதிர்த்த

கனி கவின் சிதைய வாங்கிக் கொண்டு, தன், . . . .

தாழை வேர் அளை, வீழ் துணைக்கு இடூஉம்

அலவற் காட்டி, 'நற்பாற்று இது' என,

நினைந்த நெஞ்சமொடு, நெடிது பெயர்ந்தோனே;

உதுக் காண் தோன்றும், தேரே இன்றும்;

நாம் எதிர் கொள்ளாம்ஆயின், தான் அது . . . .

துணிகுவன் போலாம்; நாணு மிக உடையன்;

வெண் மணல் நெடுங் கோட்டு மறைகோ?

அம்ம, தோழி! கூறுமதி நீயே.

நித்திலக் கோவை

← பாடல் 2096பாடல் 2098 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்