நூல்கள்›அகநானூறு›பாடல் 2096

பாடல் 2096

அம்மூவனார்

'வளை வாய்க் கோதையர் வண்டல் தைஇ,

இளையோர், செல்ப; எல்லும் எல்லின்று;

அகல் இலைப் புன்னைப் புகர் இல் நீழல்,

பகலே எம்மொடு ஆடி, இரவே,

காயல் வேய்ந்த தேயா நல் இல் . . . .

நோயொடு வைகுதிஆயின், நுந்தை

அருங் கடிப் படுவலும்' என்றி; மற்று, 'நீ

செல்லல்' என்றலும் ஆற்றாய்; 'செலினே,

வாழலென்' என்றி, ஆயின்; ஞாழல்

வண்டு படத் ததைந்த கண்ணி, நெய்தல் . . . .

தண் அரும் பைந் தார் துயல்வர, அந்தி,

கடல் கெழு செல்வி கரை நின்றாங்கு,

நீயே கானல் ஒழிய, யானே

வெறி கொள் பாவையின் பொலிந்த என் அணி துறந்து,

ஆடு மகள் போலப் பெயர்தல் . . . .

ஆற்றேன்தெய்ய; அலர்க, இவ் ஊரே!

நித்திலக் கோவை

← பாடல் 2095பாடல் 2097 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்