நூல்கள்›அகநானூறு›பாடல் 2085

பாடல் 2085

மோசிக் கரையனார்

மண்டிலம் மழுக, மலை நிறம் கிளர,

வண்டினம் மலர் பாய்ந்து ஊத, மீமிசைக்

கண்டற் கானல் குருகினம் ஒலிப்ப,

திரை பாடு அவிய, திமில் தொழில் மறப்ப,

கரை ஆடு அலவன் அளைவயின் செறிய, . . . .

செக்கர் தோன்ற, துணை புணர் அன்றில்

எக்கர்ப் பெண்ணை அக மடல் சேர,

கழி மலர் கமழ் முகம் கரப்ப, பொழில் மனைப்

புன்னை நறு வீ பொன் நிறம் கொளாஅ,

எல்லை பைப்பயக் கழிப்பி, எல் உற, . . . .

யாங்கு ஆகுவல்கொல் யானே? நீங்காது,

முது மரத்து உறையும் முரவு வாய் முது புள்

கதுமெனக் குழறும், கழுது வழங்கு, அரை நாள்,

நெஞ்சு நெகிழ் பருவரல் செய்த

அன்பிலாளன் அறிவு நயந்தேனே . . . .

மணிமிடைபவளம்

← பாடல் 2084பாடல் 2086 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்