நூல்கள்›அகநானூறு›பாடல் 2084

பாடல் 2084

செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார்

எவன் கொல்? வாழி, தோழி! மயங்கு பிசிர்

மல்கு திரை உழந்த ஒல்கு நிலைப் புன்னை

வண்டு இமிர் இணர நுண் தாது வரிப்ப,

மணம் கமழ் இள மணல் எக்கர்க் காண்வர,

கணம் கொள் ஆயமொடு புணர்ந்து விளையாட, . . . .

கொடுஞ்சி நெடுந் தேர் இளையரொடு நீக்கி,

தாரன், கண்ணியன், சேர வந்து, ஒருவன்,

வரி மனை புகழ்ந்த கிளவியன், யாவதும்

மறு மொழி பெறாஅன் பெயர்ந்தனன்; அதற்கொண்டு

அரும் படர் எவ்வமொடு பெருந் தோள் சாஅய், . . . .

அவ் வலைப் பரதவர் கானல் அம் சிறு குடி

வெவ் வாய்ப் பெண்டிர் கவ்வையின் கலங்கி,

இறை வளை நெகிழ்ந்த நம்மொடு

துறையும் துஞ்சாது, கங்குலானே!

மணிமிடைபவளம்

← பாடல் 2083பாடல் 2085 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்