நூல்கள்›அகநானூறு›பாடல் 2083

பாடல் 2083

எழுஉப்பன்றி நாகன் குமரனார்

செவ் வீ ஞாழற் கருங் கோட்டு இருஞ் சினைத்

தனிப் பார்ப்பு உள்ளிய தண் பறை நாரை

மணிப் பூ நெய்தல் மாக் கழி நிவப்ப,

இனிப் புலம்பின்றே கானலும்; நளி கடல்

திரைச் சுரம் உழந்த திண் திமில் விளக்கில் . . . .

பல் மீன் கூட்டம் என்னையர்க் காட்டிய,

எந்தையும் செல்லுமார் இரவே; அந்தில்

அணங்குடைப் பனித் துறை கைதொழுது ஏத்தி,

யாயும் ஆயமோடு அயரும்; நீயும்,

தேம் பாய் ஓதி திரு நுதல் நீவி, . . . .

கோங்கு முகைத்தன்ன குவிமுலை ஆகத்து,

இன் துயில் அமர்ந்தனைஆயின், வண்டு பட

விரிந்த செருந்தி வெண் மணல் முடுக்கர்,

பூ வேய் புன்னை அம் தண் பொழில்,

வாவே தெய்ய, மணந்தனை செலற்கே . . . .

மணிமிடைபவளம்

← பாடல் 2082பாடல் 2084 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்