நூல்கள்›அகநானூறு›பாடல் 2082

பாடல் 2082

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

"உறு கழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த

சிறு கரு நெய்தற் கண் போல் மா மலர்ப்

பெருந் தண் மாத் தழை இருந்த அல்குல்,

ஐய அரும்பிய சுணங்கின், வை எயிற்று,

மை ஈர் ஓதி, வாள் நுதல், குறுமகள்! . . . .

விளையாட்டு ஆயமொடு வெண் மணல் உதிர்த்த

புன்னை நுண் தாது பொன்னின் நொண்டு,

மனை புறந்தருதிஆயின், எனையதூஉம்,

இம் மனைக் கிழமை எம்மொடு புணரின்,

தீதும் உண்டோ, மாதராய்?" என, . . . .

கடும் பரி நல் மான், கொடிஞ்சி நெடுந் தேர்

கை வல் பாகன் பையென இயக்க,

யாம் தற் குறுகினமாக, ஏந்து எழில்

அரி வேய் உண் கண் பனி வரல் ஒடுக்கி,

சிறிய இறைஞ்சினள், தலையே . . . .

பெரிய எவ்வம் யாம் இவண் உறவே.

மணிமிடைபவளம்

← பாடல் 2081பாடல் 2083 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்