நூல்கள்›அகநானூறு›பாடல் 2086

பாடல் 2086

சாகலாசனார்

இருங் கழி மலர்ந்த வள் இதழ் நீலம்,

புலாஅல் மறுகின் சிறுகுடிப் பாக்கத்து

இன மீன் வேட்டுவர், ஞாழலொடு மிலையும்

மெல் அம் புலம்ப! நெகிழ்ந்தன, தோளே;

சேயிறாத் துழந்த நுரை பிதிர்ப் படு திரை . . . .

பராஅரைப் புன்னை வாங்கு சினைத் தோயும்

கானல்அம் பெருந் துறை நோக்கி, இவளே,

கொய் சுவற் புரவிக் கை வண் கோமான்

நல் தேர்க் குட்டுவன் கழுமலத்து அன்ன,

அம் மா மேனி தொல் நலம் தொலைய, . . . .

துஞ்சாக் கண்ணள் அலமரும்; நீயே,

கடவுள் மரத்த முள் மிடை குடம்பைச்

சேவலொடு புணராச் சிறு கரும் பேடை

இன்னாது உயங்கும் கங்குலும்,

நும் ஊர் உள்ளுவை; நோகோ, யானே . . . .

மணிமிடைபவளம்

← பாடல் 2085பாடல் 2087 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்