நூல்கள்›அகநானூறு›பாடல் 2077

பாடல் 2077

பரணர்

'கூறுவம் கொல்லோ? கூறலம் கொல்?' எனக்

கரந்த காமம் கைந்நிறுக் கல்லாது,

நயந்து நாம் விட்ட நல் மொழி நம்பி,

அரை நாள் யாமத்து விழு மழை கரந்து;

கார் விரை கமழும் கூந்தல், தூ வினை . . . .

நுண் நூல் ஆகம் பொருந்தினள், வெற்பின்

இள மழை சூழ்ந்த மட மயில் போல,

வண்டு வழிப் படர, தண் மலர் வேய்ந்து,

வில் வகுப்புற்ற நல் வாங்கு குடச் சூல்

அம் சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து, . . . .

துஞ்சு ஊர் யாமத்து முயங்கினள், பெயர்வோள்,

ஆன்ற கற்பின் சான்ற பெரிய,

அம் மா அரிவையோ அல்லள்; தெனாஅது

ஆஅய் நல் நாட்டு அணங்குடைச் சிலம்பில்,

கவிரம் பெயரிய உரு கெழு கவாஅன், . . . .

நேர் மலர் நிறை சுனை உறையும்

சூர்மகள் மாதோ என்னும் என் நெஞ்சே!

மணிமிடைபவளம்

← பாடல் 2076பாடல் 2078 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்