பாடல் 2064
பாலை பாடிய பெருங்கடுங்கோ
எல் வளை ஞெகிழச் சாஅய், ஆயிழை
நல் எழிற் பணைத் தோள் இருங் கவின் அழிய,
பெருங் கையற்ற நெஞ்சமொடு நத் துறந்து,
இரும்பின் இன் உயிர் உடையோர் போல,
வலித்து வல்லினர், காதலர்; வாடல் . . . .
ஒலி கழை நிவந்த நெல்லுடை நெடு வெதிர்
கலி கொள் மள்ளர் வில் விசையின் உடைய,
பைது அற வெம்பிய கல் பொரு பரப்பின்
வேனில் அத்தத்து ஆங்கண், வான் உலந்து
அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில், . . . .
பெரு விழா விளக்கம் போல, பல உடன்
இலை இல மலர்ந்த இலவமொடு
நிலை உயர் பிறங்கல் மலை இறந்தோரே.
மணிமிடைபவளம்