நூல்கள்›அகநானூறு›பாடல் 2065

பாடல் 2065

பரணர்

வானம் வேண்டா வறன்இல் வாழ்க்கை

நோன் ஞாண் வினைஞர் கோள் அறிந்து ஈர்க்கும்

மீன் முதிர் இலஞ்சிக் கலித்த தாமரை

நீர்மிசை நிவந்த நெடுந்தாள் அகல் இலை

இருங் கயம் துளங்க, கால் உறு தோறும் . . . .

பெருங் களிற்றுச் செவியின் அலைக்கும் ஊரனொடு

எழுந்த கௌவையோ பெரிதே! நட்பே,

கொழுங் கோல் வேழத்துப் புணை துணையாகப்

புனல் ஆடு கேண்மை அனைத்தே; அவனே,

ஒண் தொடி மகளிர் பண்டை யாழ் பாட, . . . .

ஈர்ந் தண் முழவின் எறிகுணில் விதிர்ப்ப,

தண் நறுஞ் சாந்தம் கமழும் தோள் மணந்து,

இன்னும் பிறள் வயினானே; மனையோள்

எம்மொடு புலக்கும் என்ப; வென் வேல்,

மாரி அம்பின், மழைத்தோல் பழையன் . . . .

காவிரி வைப்பின் போஒர் அன்ன, என்

செறிவளை உடைத்தலோ இலனே; உரிதினின்

யாம் தன் பகையேம் அல்லேம்; சேர்ந்தோர்

திரு நுதல் பசப்ப நீங்கும்

கொழுநனும் சாலும், தன் உடன் உறை பகையே. . . . .

மணிமிடைபவளம்

← பாடல் 2064பாடல் 2066 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்