நூல்கள்›அகநானூறு›பாடல் 2062

பாடல் 2062

கருவூர்க் கலிங்கத்தார்

'குவளை உண்கண் கலுழவும், திருந்திழைத்

திதலை அல்குல் அவ் வரி வாடவும்,

அத்தம் ஆர் அழுவம் நத் துறந்து அருளார்

சென்று சேண் இடையர் ஆயினும், நன்றும்

நீடலர்' என்றி தோழி! பாடு ஆன்று . . . .

பனித் துறைப் பெருங் கடல் இறந்து, நீர் பருகி,

குவவுத் திரை அருந்து கொள்ளைய குடக்கு ஏர்பு,

வயவுப் பிடி இனத்தின் வயின்வயின் தோன்றி,

இருங் கிளைக் கொண்மூ ஒருங்குடன் துவன்றி,

காலை வந்தன்றால் காரே; மாலைக் . . . .

குளிர் கொள் பிடவின் கூர் முகை அலரி

வண்டு வாய் திறக்கும் தண்டா நாற்றம்

கூதிர் அற்சிரத்து ஊதை தூற்ற,

பனி அலைக் கலங்கிய நெஞ்சமொடு

வருந்துவம் அல்லமோ, பிரிந்திசினோர் திறத்தே? . . . .

மணிமிடைபவளம்

← பாடல் 2061பாடல் 2063 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்