நூல்கள்›அகநானூறு›பாடல் 2060

பாடல் 2060

பரணர்

துன் அருங் கானமும் துணிதல் ஆற்றாய்,

பின் நின்று பெயரச் சூழ்ந்தனை; ஆயின்,

என் நிலை உரைமோ - நெஞ்சே! ஒன்னார்

ஓம்பு அரண் கடந்த வீங்கு பெருந் தானை

அடு போர் மிஞிலி செருவிற்கு உடைஇ, . . . .

முருகு உறழ் முன்பொடு பொருது களம் சிவப்ப,

ஆஅய் எயினன் வீழ்ந்தென, ஞாயிற்று

ஒண் கதிர் உருப்பம் புதைய ஓராங்கு

வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந் தோடு

விசும்பிடை தூர ஆடி, மொசிந்து உடன், . . . .

பூ விரி அகன் துறைக் கனை விசைக் கடு நீர்க்

காவிரிப் பேர் யாற்று அயிர் கொண்டு ஈண்டி,

எக்கர் இட்ட குப்பை வெண் மணல்

வைப்பின் யாணர் வளம் கெழு வேந்தர்

ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை, . . . .

நான் மறை முது நூல் முக்கண் செல்வன்,

ஆலமுற்றம் கவின் பெறத் தைஇய

பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர்

கைசெய் பாவைத் துறைக்கண் இறுக்கும்

மகர நெற்றி வான் தோய் புரிசைச் . . . .

சிகரம் தோன்றாச் சேண் உயர் நல் இல்

புகாஅர் நல் நாட்டதுவே பகாஅர்

பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால்,

பணைத் தகைத் தடைஇய காண்பு இன் மென் தோள்,

அணங்குசால், அரிவை இருந்த . . . .

மணம் கமழ் மறுகின் மணற் பெருங் குன்றே.

மணிமிடைபவளம்

← பாடல் 2059பாடல் 2061 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்