நூல்கள்›அகநானூறு›பாடல் 2055

பாடல் 2055

மருதம் பாடிய இளங்கடுங்கோ

கடல் கண்டன்ன கண் அகன் பரப்பின்

நிலம் பக வீழ்ந்த வேர் முதிர் கிழங்கின்

கழை கண்டன்ன தூம்பு உடைத் திரள் கால்,

களிற்றுச் செவி அன்ன பாசடை மருங்கின்,

கழு நிவந்தன்ன கொழு முகை இடை இடை . . . .

முறுவல் முகத்தின் பன் மலர் தயங்க,

பூத்த தாமரைப் புள் இமிழ் பழனத்து,

வேப்பு நனை அன்ன நெடுங் கண் நீர்ஞெண்டு

இரை தேர் வெண் குருகு அஞ்சி, அயலது

ஒலித்த பகன்றை இருஞ் சேற்று அள்ளல், . . . .

திதலையின் வரிப்ப ஓடி, விரைந்து தன்

நீர் மலி மண் அளைச் செறியும் ஊர!

மனை நகு வயலை மரன் இவர் கொழுங் கொடி

அரி மலர் ஆம்பலொடு ஆர்தழை தைஇ,

விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணிப் பொலிந்து, . . . .

மலர் ஏர் உண்கண் மாண் இழை முன்கைக்

குறுந் தொடி துடக்கிய நெடுந் தொடர் விடுத்தது

உடன்றனள் போலும், நின் காதலி? எம் போல்

புல் உளைக் குடுமிப் புதல்வற் பயந்து,

நெல்லுடை நெடு நகர் நின் இன்று உறைய, . . . .

என்ன கடத்தளோ, மற்றே? தன் முகத்து

எழுது எழில் சிதைய அழுதனள் ஏங்கி,

அடித்தென உருத்த தித்திப் பல் ஊழ்

நொடித்தெனச் சிவந்த மெல் விரல் திருகுபு,

கூர்நுனை மழுகிய எயிற்றள் . . . .

ஊர் முழுதும் நுவலும் நிற் காணிய சென்மே.

மணிமிடைபவளம்

← பாடல் 2054பாடல் 2056 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்