நூல்கள்›அகநானூறு›பாடல் 2054

பாடல் 2054

ஆலம்பேரி சாத்தனார்

வீங்கு விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை

வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர்

விடுதொறும் விளிக்கும் வெவ் வாய் வாளி

ஆறு செல் வம்பலர் உயிர் செலப் பெயர்ப்பின்,

பாறு கிளை பயிர்ந்து படுமுடை கவரும் . . . .

வெஞ் சுரம் இறந்த காதலர் நெஞ்சு உணர

அரிய வஞ்சினம் சொல்லியும், பல் மாண்

தெரி வளை முன்கை பற்றியும், 'வினைமுடித்து

வருதும்' என்றனர் அன்றே - தோழி!

கால் இயல் நெடுந் தேர்க் கை வண் செழியன் . . . .

ஆலங் கானத்து அமர் கடந்து உயர்த்த

வேலினும் பல் ஊழ் மின்னி, முரசு என

மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி,

நேர் கதிர் நிறைத்த நேமிஅம் செல்வன்

போர் அடங்கு அகலம் பொருந்திய தார்போல், . . . .

திருவில் தேஎத்துக் குலைஇ, உரு கெழு

மண் பயம் பூப்பப் பாஅய்,

தண் பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே?

மணிமிடைபவளம்

← பாடல் 2053பாடல் 2055 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்