பாடல் 2056
செல்லூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார்
'தொல் நலம் சிதையச் சாஅய், அல்கலும்,
இன்னும் வாரார்; இனி எவன் செய்கு?' எனப்
பெரும் புலம்பு உறுதல் ஓம்புமதி சிறு கண்
இரும் பிடித் தடக் கை மான, நெய் அருந்து
ஒருங்கு பிணித்து இயன்ற நெறி கொள் ஐம்பால் . . . .
தேம் கமழ் வெறி மலர் பெய்ம்மார், காண்புஇன்
கழை அமல் சிலம்பின் வழை தலை வாடக்
கதிர் கதம் கற்ற ஏகல் நெறியிடை,
பைங் கொடிப் பாகல் செங் கனி நசைஇ,
கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப் பெடை . . . .
அயிரி யாற்று அடைகரை வயிரின் நரலும்
காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும்,
வல்லே வருவர் போலும் - வெண் வேல்
இலை நிறம் பெயர ஓச்சி, மாற்றோர்
மலை மருள் யானை மண்டு அமர் ஒழித்த . . . .
கழற் கால் பண்ணன் காவிரி வடவயின்
நிழல் கயம் தழீஇய நெடுங் கால் மாவின்
தளிர் ஏர் ஆகம் தகை பெற முகைந்த
அணங்குடை வன முலைத் தாஅய நின்
சுணங்கிடை வரித்தல் தொய்யிலை நினைந்தே . . . .
மணிமிடைபவளம்