நூல்கள்›அகநானூறு›பாடல் 2051

பாடல் 2051

மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்

வாரணம் உரறும் நீர் திகழ் சிலம்பில்

பிரசமொடு விரைஇய வயங்கு வெள் அருவி

இன் இசை இமிழ் இயம் கடுப்ப, இம்மெனக்

கல் முகை விடர்அகம் சிலம்ப, வீழும்

காம்பு தலை மணந்த ஓங்கு மலைச் சாரல்; . . . .

இரும்பு வடித்தன்ன கருங் கைக் கானவன்

விரி மலர் மராஅம் பொருந்தி, கோல் தெரிந்து,

வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி,

இகல் அடு முன்பின் வெண் கோடு கொண்டு, தன்

புல் வேய் குரம்பை புலர ஊன்றி, . . . .

முன்றில் நீடிய முழவு உறழ் பலவின்,

பிழி மகிழ் உவகையன், கிளையொடு கலி சிறந்து,

சாந்த ஞெகிழியின் ஊன் புழுக்கு அயரும்

குன்ற நாட! நீ அன்பிலை ஆகுதல்

அறியேன் யான்; அஃது அறிந்தனென் ஆயின் . . . .

அணி இழை, உண்கண், ஆய் இதழ்க் குறுமகள்

மணி ஏர் மாண் நலம் சிதைய,

பொன் நேர் பசலை பாவின்று மன்னே!

மணிமிடைபவளம்

← பாடல் 2050பாடல் 2052 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்