நூல்கள்›அகநானூறு›பாடல் 2050

பாடல் 2050

கல்லாடனார்

'நுதலும் நுண் பசப்பு இவரும்; தோளும்

அகல் மலை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த

பணை எழில் அழிய வாடும்; நாளும்

நினைவல் மாது அவர் பண்பு' என்று ஓவாது

இனையல் வாழி, தோழி! புணர்வர் . . . .

இலங்கு கோல் ஆய் தொடி நெகிழ, பொருள் புரிந்து

அலந்தலை ஞெமையத்து அதர் அடைந்திருந்த

மால் வரைச் சீறூர் மருள் பல் மாக்கள்

கோள் வல் ஏற்றை ஓசை ஓர்மார்,

திருத்திக் கொண்ட அம்பினர், நோன் சிலை . . . .

எருத்தத்து இரீஇ, இடம் தொறும் படர்தலின்,

கீழ்ப்படு தாரம் உண்ணா, மேற் சினைப்

பழம் போல் சேற்ற தீம் புழல் உணீஇய,

கருங் கோட்டு இருப்பை ஊரும்

பெருங் கை எண்கின் சுரன் இறந்தோரே! . . . .

மணிமிடைபவளம்

← பாடல் 2049பாடல் 2051 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்