நூல்கள்›அகநானூறு›பாடல் 2049

பாடல் 2049

மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்

கானலும் கழறாது; கழியும் கூறாது;

தேன் இமிர் நறு மலர்ப் புன்னையும் மொழியாது;

ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலனே;

இருங் கழி மலர்ந்த கண் போல் நெய்தல்

கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசைஇ, . . . .

தண் தாது ஊதிய வண்டினம் களி சிறந்து,

பறைஇய தளரும் துறைவனை, நீயே,

சொல்லல் வேண்டுமால் அலவ! பல்கால்

கைதைஅம் படுசினை எவ்வமொடு அசாஅம்

கடற் சிறு காக்கை காமர் பெடையொடு . . . .

கோட்டுமீன் வழங்கும் வேட்டம் மடி பரப்பின்

வெள் இறாக் கனவும் நள்ளென் யாமத்து,

'நின் உறு விழுமம் களைந்தோள்

தன் உறு விழுமம் நீந்துமோ!' எனவே.

மணிமிடைபவளம்

← பாடல் 2048பாடல் 2050 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்